உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில், 870 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி
திட்டங்களை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு
சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்து
கொள்ள வேண்டும் என்ற முனைப்பில், யோகி ஆதித்யநாத் அரசு மும்முரம் காட்டி
வருகிறது. இதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி அடிக்கடி உத்தர பிரதேச மாநிலம்
சென்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். அந்தவகையில்,
இன்று வாரனாசி சென்ற மோடி, 475 கோடி ரூபாய் செலவில் 30 ஏக்கர் நிலத்தில்
உருவாக இருக்கும் ‘பனாஸ் டெய்ரி சங்குல்’ திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அடித்தட்டு மக்களுக்கான நில உரிமைப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில்
இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்போருக்கு உரிமை ஆவணங்களை
காணொலி காட்சி மூலம் வழங்கினார்
Like this:
Like Loading...