தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி என்.வி. ரமணா, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் உருமாறிய புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பாக செயல்படும், ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதால் இந்த தடுப்பூசி குறித்து சிலர் விமர்சனம் செய்கின்றனர். இது குறித்து உலக சுகாதார அமைப்பிலும் சிலர் புகார் அளித்துள்ளனர்.
மறுபுறம் சில வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய தடுப்பூசிகளுக்கு எதிராக செயல்படுகின்றன. உள்நாட்டில், இந்திய தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைக்கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள். அதன் பெருமையை சக தெலுங்கு மக்களிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. தாய், தாய்மொழி, தாய் நாட்டை மதிக்கவும். தாய்மொழியை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.