கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் நிறைவுப் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.
இது குறித்த வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், பிரதமர் திட்டத்தை பார்வையிட்டு ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த நீளம் 32 கிமீ மற்றும் ரூ.11,000 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பினா-பாங்கி மல்டிபுராடக்ட் பைப்லைன் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.