நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை


கொரோனா தடுப்பு பணியின் போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 
உயிரிழந்த தூய்மை பணியாளர்கள் 2 நபர்களுக்கு 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து 
தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. கொரோனா  தடுப்பு பணியில் 
ஈடுபட்டு உயிரிழந்த, தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம், 
வில்லியவரம்பல் ஊராட்சி, தூய்மை காவலர் மௌனதாஸ் மற்றும் விருதுநகர் மாவட்டம், 
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், மகாராஜபுரம் ஊராட்சி, தூய்மை காவலர் 
ராஜேந்திரன் ஆகிய இரண்டு நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண 
நிதியிலிருந்து தலா 25 லட்சம் வீதம் 50 லட்சம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து 
தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், நிவாரண தொகையை உயிரிழந்தவர்களின் 
குடும்பங்களுக்கு காசோலை மூலமாகவோ அல்லது அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கு 
மூலமாகவோ உரிய நடைமுறை விதிகளின்படி வழங்கிட மாவட்ட ஆட்சியர்கள் உறுதி 
செய்ய வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Translate »
error: Content is protected !!