நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரி தமிழக அரசு அனுப்பிய மசோதா, பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை பதில்

நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரி தமிழக அரசு அனுப்பிய மசோதா, பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை பதில் அளித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி, கடந்த செப்டம்பர் மாதம் நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், மசோதா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, மசோதாவின் தற்போதைய நிலை என்ன? என பிரின்ஸ் கஜேந்திரன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த மாதம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஆளுநர் மாளிகை, மசோதா பரிசீலனையில் இருப்பதாகக் கூறியது.

Translate »
error: Content is protected !!