உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எண்ணிக்கை 28.48 கோடி

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் மற்ற நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்காக உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி, போர்ச்சுகல், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், நைஜீரியா, பிரான்ஸ், இந்தியா மற்றும் ஐஸ்லாந்து உள்ளிட்ட 106 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. ஒமைக்ரான் ரஸ் பரவிய நாடுகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28,48,71,603 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25,24,00,197 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54,38,175 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெறுபவர்களில் 89,433 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Translate »
error: Content is protected !!