இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை வாங்க பிலிப்பைன்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இணைந்து உருவாக்கிய பிரமோஸ் ஏவுகணை உலகிலேயே அதிவேகமாகச் செல்லக்கூடிய ஏவுகணையாகும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த பிரமோஸ் ஏவுகணையை இந்தியாவிடம் இருந்து சுமார் 4 ஆயிரத்து 9 கோடி ரூபாய்க்கு வாங்க பிலிப்பைன்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது. முதல்கட்டமாக இந்தியாவில் பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை வாங்க பிலிப்பைன்ஸ் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இதனை தொடர்ந்து இந்தியாவின் நட்பு நாடுகளும் பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை வாங்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஒலியை விட 3 மடங்கு வேகமாக பாயக் கூடியது இந்த பிரமோஸ் ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.