அலை சீற்றத்தால் கடல் அரிப்பு

நாகை அருகே அலை சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல் நீர் குடியிருப்புகளை சூழும் அபாய நிலை உருவாகியுள்ளது. நாகை  அருகே உள்ள கல்லார் கிராமத்தில் கடந்த சில தினங்களாக கடல் சீற்றம் காரணமாக கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.  கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள கற்களை தாண்டி 100 அடிக்கு கடல் நீர் வந்துள்ளது. அதாவது 150 அடிக்கு கடல் நீர் உள்ளே புகுந்துள்ளது. இதனால் கல்லார் கிராமம் விரைவில் கடல் நீர்  குடியிருப்புக்குள் புகும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே கடற்கரையை ஒட்டி கொட்டப்பட்டுள்ள கற்களில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு கற்களை கொட்டி கடல் நீர்  உட் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!