தமிழகத்தில் கூடுதலாக 50,000 படுக்கைகள் அமைக்கப்பட வேண்டும் – செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 3-வது அலை தொடங்கியுள்ள நிலையில், விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறிருப்பதாவது,

தமிழகத்தில் கூடுதலாக 50,000 படுக்கைகள் அமைக்கப்பட வேண்டும்.

* கோவிட் கேர் மையங்களைத் திறந்து தேவையான பணியாளர்களை நியமிக்கவும்.

* கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவுவதைக் கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

* கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காதவர்களுக்கு கட்டாய அபராதம் விதிக்க வேண்டும்.

* அனைத்து மாவட்டங்களிலும் வார் ரூம்( War Room) அறை முழுமையாக செயல்பட வேண்டும்; தேவையான பரிசோதனை மையங்களை திறக்க வேண்டும்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் மற்றும் ஆய்வுகளுக்கு இணங்க வேண்டும்.

* முகக்கவசம்அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க தயங்க தேவையில்லை.

* முகக்கவசம் அணியாதவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே அபராதம் வசூலிக்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!