டெல்லியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வார இறுதி நாட்களில் டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“டெல்லியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது. அத்தியாவசிய பணிகள் தவிர, அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும். பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நெரிசலைத் தவிர்க்க பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் அனைத்து இருக்கைகளிலும் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. ” என்று தெரிவித்துள்ளார்.