பிறந்த நாள் காணும் தமிழக எம்.பி கனிமொழி, தந்தை கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று 54வது பிறந்த நாளை காண்கிறார். இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரைக்கு சென்ற அவர், தந்தை கருணாநிதி மற்றும் அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது, அவரது ஆதரவாளர்கள் பூங்கொத்து வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, பெண்களின் திருமண வயதினை உயர்த்துவது தொடர்பான மசோதாவிற்கு அமைக்கப்பட்ட ஆய்வு குழுவில் ஒரு பெண் மட்டுமே இடம்பெற்றுள்ளதால், இதை மறுபரிசீலனை செய்யும்படி ஒன்றிய அரசினை வலியுறுத்த உள்ளதாக கூறினார்.