மும்பை, டெல்லி போன்ற நகரங்கள் ஜனவரி 2வது வாரத்தில், கொரோனாவின் மிகப்பெரிய தாக்கத்தை சந்திக்க கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் ஒமிக்ரான் பரவலுக்கு பின் மூன்றாவது அலை வீசத்தொடங்கியுள்ளது. தற்போது தினசரி பாதிப்பு ஒன்றரை லட்சத்தை கடந்துள்ள நிலையில், நடப்பு மாதம் இறுதி அல்லது பிப்ரவரி மாத துவக்கத்தில் இதன் தாக்கம் பன்மடங்காக அதிகரிக்க கூடும் என ஐஐடி கான்பூர் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக தினசரி பாதிப்பு 8 லட்சத்தை நெருங்கும் என்றும், இது 2வது அலையை காட்டிலும் இரு மடங்காக இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் தற்போதே தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியிருப்பதாகவும், நடப்பு மாதம் 2வது வாரத்திற்கு பின் தினசரி தொற்று பாதிப்பு சராசரியாக 60 லிருந்து 70 ஆயிரமாக பதிவாகும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.