அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில், தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி பெரிய நாயகி அம்மன் கோவிலில், இன்று காலை 6.30 மணிக்குமேல் யாக வேள்வியுடன் வேத மந்திரங்கள் முழங்க, கோவில் கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்று. கொரோனா பரவல் காரணமாக முதன்முறையாக, பழனி தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி, திருக்கோவில் அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இன்று முதல் 10 நாட்களுக்கு நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில், 17ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாணம், 18ஆம் தேதி நடைபெறும் திருத்தேரோட்டம் ஆகிய நிகழ்வுகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது…