மாஸ்க் போடாமல் சுற்றிய நடிகர்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூரில், நடிகர்கள் முகக்கவசம் அணியாமல் சாலையில் உலா வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூடலூரில் தமிழ் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பிற்காக நடிகர்கள் ராம்கி, நட்டி என்கிற நடராஜ், மனோபாலா, ரவி மரியா உள்ளிட்டோர் கூடலூர் சென்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கின் போது, நடிகர்கள் மனோபாலா, ரவி மரியா ஆகியோர் முகக்கவசம் அணியாமல் வெளியே நடந்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. ஊரடங்கை பின்பற்றி மக்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய சினிமா பிரபலங்கள், அதை மதிக்காமல் சாலையில் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Translate »
error: Content is protected !!