சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா பரவலைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான சேவைகள் தடை செய்யப்பட்டன. அதன்பிறகு கொரோனா தாக்கம் சற்று குறைந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.

இந்நிலையில், இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கு மட்டும் தடை இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!