எரிபொருள் வாங்குவதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா ரூ.3,730 கோடி கடனுதவி

எரிபொருள் கொள்முதலுக்கு இந்தியாவின் உதவியை நாட இலங்கை திட்டமிட்டிருந்தது. இலங்கை அரசு இந்தியாவிடம் 7,391 கோடி ரூபாய் கடன் உதவி கோரியிருந்தது.

இந்நிலையில், இந்தியா சார்பில் பெற்றோலியப் பொருட்களை வாங்குவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ரூ.3,730 கோடி கடனுதவி அளிக்க முடிவு செய்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இலங்கை நிதியமைச்சர் பஷில் ராஜபக்சே இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த கடனுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!