உத்தரபிரதேசத்தில் தொகுதிக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏ-வை கிராம மக்கள் உள்ளே நுழைய விடாமல் எதிர்ப்பு தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே எஞ்சியிருக்கும் நிலையில் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது. அவ்வாறு மக்களிடையே வாக்கு சேகரிக்க சென்ற கட்டௌலி தொகுதி பாஜக எம்எல்ஏ விக்ரம் சிங் சைனியை கிராமத்திற்குள் நுழைய விடாமல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி-யின் காரை சூழ்ந்துக் கொண்ட கிராம மக்கள் பாஜகவுக்கு எதிராகவும், எம்.எல்.ஏ-வுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியதால் வேறு வழியின்றி எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி அங்கிருந்து வெளியேறினார். சர்க்சைக்குரிய வேளாண் சட்டங்களை ஓர் ஆண்டு தொடர் போராட்டத்துக்கு பிறகு மத்திய அரசு திரும்ப பெற்றதே கிராம மக்களின் கொந்தளிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.