சென்னையில், ஒரு சவரன் நகை 37 ஆயிரம் ரூபாயை நெருங்கி வருவதால், வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கொரோனா பரவல், உலகம் முழுவதும் தங்கத்தில் முதலீடு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. அந்தவகையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்து 594 ரூபாய்க்கும், ஒரு சவரன் 36 ஆயிரத்து 752 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 69 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.