ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில் தந்தையின் சொத்துகளுக்கு மகள் உரிமை கோர முழு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் தந்தையின் சொந்துகளுக்கு ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில், தந்தையின் சகோதரனின் மகனுக்கு உரிமை கோர அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி உச்சநீதிமன்ற நீதிபதி முராரி தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், தந்தையின் விருப்ப உயில் இல்லாத சொத்துகளுக்கு ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில் மகள் உரிமை கோர முழு அதிகாரம் உண்டு என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.