தமிழகம் முழுவதும் இன்று 19 வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி, 18 வது தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கடந்த வாரம் 15ஆம் தேதி (சனிக்கிழமை) பொங்கல் விடுமுறை என்பதால் இந்த சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று( சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடஙக்ளில் 19 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Translate »
error: Content is protected !!