காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 70 லட்சம் பேர் ஸ்டிரோக், இருதய நோய், சுவாச பிரச்னை காரணமாக உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
காற்றின் தரக் குறியீடு என்பது தினசரி காற்றின் தர அறிக்கையின் குறிகாட்டியாகும். இது குறித்து அரசு அமைப்புகள் மக்களுக்கு தெரிவிக்கின்றன. ஒரு நகரம் எவ்வளவு தூய்மையானது அல்லது மாசுபட்டுள்ளது என்பதை இது உங்களுக்குத் தெரிவிக்கும்.
இதன்படி, பாகிஸ்தானின் கராச்சி நகரம் காற்றின் தரக் குறியீடு 224 ஆக உள்ளது, இது உலகின் 3வது அதிக காற்று மாசுபட்ட நகரமாக உள்ளது.