இந்தியாவில் நேற்றை விட தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைவு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்றைய பாதிப்பைவிட குறைவாகும். நேற்று 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 ஆக இருந்தது. இதனால் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 95 லட்சத்து 43 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 495 பேர் கொரோனா தொற்றிலுருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 68 லட்சத்து 4 ஆயிரத்து 145 அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 439 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 89 ஆயிரத்து 848 ஆக உள்ளது.

Translate »
error: Content is protected !!