தி.மு.க மாவட்ட செயலாளரை கண்டித்து அ.தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம்

தி.மு.க மாவட்ட செயலாளரை கண்டித்து அ.தி.மு.க வினர் 300 ஆர்ப்பாட்டம் – ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து பாதிப்பு.
திருச்சி தி.மு.க வின் வடக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் காடுவெட்டி தியாகராஜன். இவர் குறிப்பிட்ட சமூகத்தையும் அந்த சமூகத்தை சேர்ந்த பெண்களையும் இழிவாக பேசிய ஆடியோ கடந்த  சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் பரவியது. இதற்கு அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து காடுவெட்டி கிராம நிர்வாக அலுவலர் தனலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் தியாகராஜன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் குறிப்பிட்ட சமூகத்தையும் அந்த சமூகத்தை சார்ந்த பெண்களையும் இழிவாக பேசிய தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை கண்டித்து அண்ணாசிலை அருகே மாநகர் மாவட்ட அ.தி.மு.க வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தியாகராஜனை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் அ.தி.மு.க வினர் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பலர் முக கவசம் அணியாமலும் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காமலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதால் அப்பகுதியில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தினால் அண்ணா சலையில் இருந்து காவிரி பாலம், மாம்பழச்சாலை வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குறிப்பிட்ட சமூகத்தை இழிவாக பேசியதாக திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் ஆடியோ ஒன்று வெளியானது. இந்த நிலையில் அந்த சமூகத்தின் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று தியாகராஜன் தான் பேசியதற்கு கண்ணீர்விட்டு கதறி மன்னிப்பு கேட்டார், மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த விவகாரத்தை இத்தோடு முடித்துக் கொள்ள வேண்டும் எனவும், இதை அரசியலாக்க வேண்டாம் எனவும் அந்த சமூகத்தினர் கோரிக்கை வைத்த நிலையில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பணிக்குச் செல்பவர்கள் மிகுந்த சிரமத்துடன் போக்குவரத்து பாதிப்பு அவதியுற்றனர்.
Translate »
error: Content is protected !!