சவுதி அரேபிய கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலால், ஏமன் மக்கள் கடந்த 3 நாட்களாக இணைய வசதியின்றி தவித்து வருகின்றனர்.
ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில், ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரானும், ஏமன் அரசை சவுதி அரேபியாவும் ஆதரித்து வருகின்றன. கடந்த வாரம் அபுதாபி விமான நிலையத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 பேர் பலியானார்கள்.
பதிலடியாக சவுதி அரேபிய கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குலில் ஏராளமானோர் உயிரிழந்தனர். மேலும், இணையவழி கட்டமமைப்புகள் கடும் சேதமடைந்து, இணைய வசதி துண்டிக்கப்பட்டது. இதனல், பணப்பரிமாற்றம் மற்றும் வெளியூரில் உள்ள குடும்பத்தினர் குறித்து அறிய முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். உரிய பாதுகாப்பு என்ற உறுதி கிடைத்தால் இணைய தள இணைப்பை சீர் செய்ய தயாராக இருப்பதாக ஏமன் தகவல் தொடர்ப்பு துறை தெரிவித்துள்ளது.