13 புதிய மாவட்டங்கள் பிரிப்பு

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கையை 13-லிருந்து 26 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அம்மாநில அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரிக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன. மாவட்டங்களை பிரிக்க தனியாக ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது குடியரசு தினத்தையொட்டி மாவட்டங்களை பிரித்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அம்மாநில அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிதாக திருப்பதி, சித்தூர், ராயசூட்டி, புட்டபர்தி உள்ளிட்ட  13 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திர மாநிலத்தின் மொத்தமாவட்டங்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

Translate »
error: Content is protected !!