அதிமுகவினர் தேவதானபட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டது ஏன் ?

தமிழக முதலவர் மற்றும் துணை முதலவர் இருவரையும் அவதூராக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட திமுக பிரமுகர் மகனை கைது செய்ய கோரி அதிமுகவினர் தேவதானபட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானபட்டி முன்னால் பேரூராட்சி தலைவர் மகன் நிபந்தன். இவர் சட்ட கல்லூரியில் வழக்கறிஞர் படிப்பை முடித்து தமிழக  பார்கவுன்சிலில் பதிவு செய்ய உள்ள நிலையில் நேற்று முந்தினம் தமிழக முதல்வர் மற்றும் துணை முதலவர் ஆகிய இருவரின் பெயரை குறித்து அவதூராக பேசியும், வயதான அதிமுக தொண்டர் ஒருவரின் கட்சி வேட்டியை கழற்றி அதை தீயிட்டு எரிக்க கூறி அதை சமுக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை அறிந்த அதிமுக கட்சியினர் சமூக வலைதளத்தில் அவதூரு பரப்பிய திமுகவின் தேவதானபட்டி பேரூர்ராசி முன்னால் தலைவர் குணசேகரனின் மகன் நிபந்தன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரி தேனி மாவட்ட அதிமுக மாவட்ட தலைவர், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தேவதானபட்டி காவல்நிலையத்தில் முற்றுகையிட்டு அவதூராக பேசிய நிபந்தனை கைது செய்ய கோரிக்கை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அங்கு இருந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாலர் முத்துகுமார் அவர்களிடம் கைது செய்ய கோரி கோரிக்கைமனுவை கொடுத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அதிமுகவினர் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.
Attachments area
Translate »
error: Content is protected !!