கோவாக்சின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் மற்றும் கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவை கொரோனா தடுப்பூசிகளை விற்க அனுமதி கோரி இருந்தன.
மருத்துவ பரிசோதனைகளின் தரவுகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரிடம் அளித்தன. ஜனவரி 19 அன்று கொரோனா தொடர்பான நிபுணர் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு சந்தை விற்பனைக்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இரண்டு தடுப்பூசிகளின் சந்தை விற்பனையும் புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிகள், 2019ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.