ஜம்மு-காஷ்மீரில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர்.
73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீரில் நேற்று கொடிக்கொம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது. இந்த கொண்டாட்டத்திற்கு இடையே ஷோபியான் மாவட்டத்தில், தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செக் நவ்கம் பகுதியில் வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் ராணவ வீரர்கள் 3 பேர் படுகாயமுற்றிருப்பதாகவும், தொடர்ந்து அங்கு பயங்கரவாதிகள் – ராணுவ வீரர்கள் இடையே சண்டை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.