ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து வரும் இளைஞர்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தரும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், இளைஞர் குழுக்கள் சூடான் முழுவதிலும் உள்ள நகரங்களில் நூற்றுக்கண்க்கான மக்களை ஈர்த்து ஆர்ப்பாட்டங்களை முன்னின்று நடத்துகின்றனர்.
அதே போல் சிறிய எதிர்ப்புகள், தடுப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்கள், தகவல் தொடர்பு தடைகளை மீறி, பாதுகாப்பு ஒடுக்குமுறையை மீறி நடைபெற்ற போராட்டங்களில் 79 பேரை பலி கொடுத்துள்ளனர். மேலும் இளைஞர்கள் தங்களின் குழுவால் அரசியல் சாசனத்தை கையில் எடுக்க முடியும் என்றும் அதற்கான காலம் கணிந்து வருவதாகவும் அறிவித்துள்ளனர்.