24 ஆயிரத்து 80 கிலோமீட்டர் ரயில் பாதை மின்மயமாக்கம்

2013-2014ம் ஆண்டு முதல் 2020-2021ம் ஆண்டு வரை 24 ஆயிரத்து 80 கிலோமீட்டர் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், சுதந்திரத்திற்குப் பிறகு 2013-2014-ம் ஆண்டு வரை இந்தியாவில் 21 ஆயிரத்து 413 கிலோ மீட்டரும், 2020-2021-ம் ஆண்டு வரை 24 ஆயிரத்து 80 கிலோ மீட்டரும் மின் மயமாக்கப்பட்டுள்ளது என்றார். இதன் காரணமாக கச்சா எண்ணெய் தேவை குறைந்து நாட்டின் எரி சக்தி அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!