மலேஷியாவில், வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பாம்பு இருந்ததால், விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏஷியா விமானம் ஒன்று பயணிகளுடன் தவாவ் பகுதிக்கு புறப்பப்பட்டது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, விமானத்தில் பாம்பு இருப்பதைக் கண்ட பயணிகள் அலறத் தொடங்கினர். இதையடுத்து குச்சிங் பகுதியில், விமானத்தை தரையிறக்கிய விமான, பயணிகளை பத்திரமாக வெளியேற்றினார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், செல்லப்பிராணிகளை பாதுகாக்கும் லக்கேஜ் பகுதியிலிருந்தோ அல்லது வெளியே இருந்தோ பயணிகள் இருக்கை பகுதிக்குள் பாம்பு நுழைந்திருக்கக் கூடும் என விமான ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.