நியாயவிலைக்கடைகளில் உள்ள தகவல் பலகையில் பொருட்கள் இருப்பு விவரங்களை குறிப்பிட, மாவட்ட ஆட்சியர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில், பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விவரங்களை காட்சிப்படுத்தப்பட அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக வேலை நேரம், இன்றியமையாப் பண்டங்கள் இருப்பு விவரம், விநியோகம் செய்யப்பட்ட விவரம், விற்பனை விலை உள்ளிட்டவை தகவல் பலகையில் இடம்பெறவேண்டும் என்றும், நியாயவிலைக்கடை தொடர்பாக புகார் அளிக்க உணவுத்துறை அமைச்சரின் அலுவலக எண் , உணவுத்துறை செயலாளர், உணவுப்பொருள் வழங்கல் ஆணையாளர் ஆகியோரின் எண்கள் இடம்பெறவேண்டும் என கூறியுள்ளார்.