தமிழகத்தில் திருக்கோயிலுக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு வருகிறது. அதன்படி 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலஅளவை கல் பதிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே, நிலங்களை திருக்கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.