கர்நாடகவில் உள்ள உடுப்பி மாவட்டம் 100 சதவீதம் அமைதியாக இருப்பதாக அம்மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் கடந்த சில வாரங்களாக கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அசாதாரண நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கல்லூரிகள் நேற்று முதல் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய உடுப்பி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சித்தலிங்கப்பா, உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை பின்பற்றி வருவதாகவும், மாவட்டத்தில் தற்போது எந்த பதற்றமும் இல்லை என்றும், 100 சதவீதம் அமைதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.