குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று முதல் வரும் 27அம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மழைப் பொழிவு ஏதும் பதிவாகாததால் மீனவர்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.