உக்ரைனில் போரை நிறுத்த ஐநா வேண்டுகோள்

 

மனிதாபிமான அடிப்படையிலாவது போரை நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதினுக்கு ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது போன்ற நேரங்களில் அப்பாவி மக்கள்தான் அதிக பாதிப்பைச் சந்திக்க நேர்வதாக வேதனை தெரிவித்துள்ள அவர், உடனடியாக படைகளை திரும்பப் பெற புதின் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனிடையே,  உக்ரைனில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர்  வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் சர்வதேச எல்லைகளை கடந்து நடந்து செல்வதாகவும் ஐநா அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் வகையில் போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகள் அனைத்தும் தங்கள் எல்லைகளை திறந்து வைத்து, தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!