மாற்றுத்திறனாளிகள் பெட்டிகளில் பயணிக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு அபராதம்

மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் பயணிக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. புறநகர், பயணிகள் மற்றும் விரைவு ரயில்களில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பயணிப்பதற்காக தனி பெட்டிகள் ஒதுக்கப்படுகிறது. அதில் மாற்றுத்திறனாளி அல்லாதவர் பயணிக்க முடியாது. இந்தநிலையில், அந்த பெட்டிகளில் ரயில்வே ஊழியர்கள் பயணித்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்தன. மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டுப் பெட்டியில் பயணிக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு ரயில்வே சட்டப்படி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்டுள்ளது.

Translate »
error: Content is protected !!