மத்திய அரசுடன் ஒருங்கிணைந்த மெகா ஜவுளி பூங்கா – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்த மெகா ஜவுளி பூங்கா அமைய உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சிப்காட் பகுதியில் ஆயிரத்து 152 ஏக்கர் பரப்பளவில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் அறைகலன் பூங்கா அமைக்கும் திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தென்மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி, பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த பூங்கா விளங்கும் என தெரிவித்தார். இதுமட்டுமின்றி சிப்காட் சாலையில் அமைந்துள்ள தொழிற்சாலைக்காக தினசரி 30 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறிய முதலமைச்சர், தேனியில் 150 ஏக்கர் பரப்பளவில் உணவு பூங்காவும், விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஜவுளி துறை மூலமாக ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!