தமிழகம், புதுச்சேரியில் இன்றும் நாளையும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 16ம் தேதியன்று தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.17ம் தேதி தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.18ம் தேதி நீலகிரி, தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.