ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனை கூட்டம்

 

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 24-வது நாளாக தாக்குதல்களை நிகழ்த்தி வரும் நிலையில் உக்ரைனின் தற்போதைய நிலை குறித்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதனாம், உக்ரைனில் உடனடி போர் நிறுத்தம் மற்றும் அரசியல் தீர்வுகாண வேண்டும் என  வலியுறுத்தினார்.

மேலும் இதுவே நமக்கு இப்போது தேவைப்படும் உயிர்காக்கும் மருந்து என குறிப்பிட்ட அவர்  உக்ரைனில் மனிதாபிமான தேவைகளை ஆதரிப்பதற்கு  முழுமையாக நிதியளிக்குமாறு அனைத்து நன்கொடையாளர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார். உக்ரைனின் சுகாதார உள்கட்டமைப்பு பரவலாக அழிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த அவர், உக்ரைனில் உள்ள சுகாதாரப் நிலைகள் மீது ரஷ்யா 43 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!