ஹோலி பண்டிகை உற்சாகமுடன் கொண்டாட்டம்

 

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்று உற்சாகமுடன் கொண்டாடப்பட்டு வருகிறாது. இதனை முன்னிட்டு வண்ண பொடிகளின் விற்பனை சூடு பிடித்துது.

வண்ணங்களின் திருவிழா, மகிழ்ச்சி மற்றும் தீமையை, நன்மை வெற்றி கொண்டதற்கான அடையாளம் ஆக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவியும், பூசியும் ஹோலி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

இந்த பண்டிகைக்கு முந்தின நாளான நேற்று ஹோலி தகனம் என்ற நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.  இதனை பஞ்சாப்பின் அமிர்தசரஸ், டெல்லியின் கோல் மார்க்கெட் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் மக்கள் கொண்டாடினர். அப்போது அவர்கள் மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்தனர்.

 

Translate »
error: Content is protected !!