ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த ஆண்டு ஹோலி பண்டிகை கூடுதல் மற்றும் வலுவான அர்த்தத்துடன் கொண்டாடப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், கொரோனா தொற்று நோயின் 2 ஆம் ஆண்டு இறுதியில் நாம் இருக்கும் தருணத்தில் பல தடைகளை தாண்டி இன்று ஆரோக்கியமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் நம் குடும்பம், சமூகத்தின் நிலைக்கும் நம்பிக்கைக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் நாம் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடுவதாகவும் தெரிவித்தார்.