வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

 

மீண்டும் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை நிலவக்கூடும்.

மேலும் இது வடக்கு திசையில் அந்தமான் கடலோர பகுதி வழியாக நகர்ந்து நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சியால் இன்று தஞ்சை, திருவாரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!