கொரோனா ஊரடங்கு தளர்வுகள்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது தொற்று பெருமளவு குறைந்துள்ளதால், மாநில அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இதனிடையே தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா அலைக்கு வாய்ப்பில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடப்பு மாதம் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், அதனை நீட்டிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதார அதிகாரிகள்  பலர் கலந்து கொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!