தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி

தஞ்சாவூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ராமநாதபுரம் முதன்மை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. கோட்டாசியர் ரஞ்சித் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டதும் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

இதில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 650 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சுற்றுக்கு 50 வீரர்கள் என மொத்தம் 6 சுற்றுகளாக இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்தனர், மாடுபிடி வீரர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், சேர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

 

Translate »
error: Content is protected !!