கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைவு

 

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை ஒட்டி சரிந்துள்ளது. ஒமிக்ரான் பரவலுக்கு பின், இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக ஆயிரத்து 96 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் 13 ஆயிரத்து 13 ஆக குறைந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று மட்டும் தீவிர தொற்றுக்கு 81 பேர் பலியாகியுள்ளனர். தற்போது வரை 4 கோடியே 24 லட்சத்து 93 ஆயிரத்து 773 பேர் தொற்றிலிருந்து மீண்டிருப்பதாகவும், கொரோனாவுக்கு எதிராக 184 புள்ளி 66 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!