புயல் பாதித்த கடலூரில் முதல்வர் ஆய்வு: மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு நேரில் பார்வையிட்ட முதல்வர் பழனிச்சாமி, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல், நேற்று நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அப்போது கடலூர், புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெயதது.

குறிப்பாக கடலூரில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வாழை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன. மனம்பாடி கிராமத்தில் 200 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இச்சூழலில், சென்னையில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு சாலை மார்கமாக இன்று பிற்பகல் சென்ற முதல்வர் பழனிச்சாமி, கடலூர் ரெட்டிசாவடி, குமாரமங்கலம் பகுதிகளில் பலத்த காற்றால் சாய்ந்து போன வாழை மரங்களை நேரில் பார்த்து, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தேவனாம்பட்டினம் நகராட்சி நடுநிலைபள்ளியில் புயல் பாதுகாப்பு மையத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். நிவர் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தையும் முதல்வர் பார்வையிட்டனார். எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர் எம்.சி. சம்பத், கலெக்டர் மற்றும் வேளாண் துறை செயலாளர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

Translate »
error: Content is protected !!