உக்ரைனில் வெளிநாட்டு கூலிப்படையினரின் எண்ணிக்கை  

 

உக்ரைனில் இயங்கும் வெளிநாட்டு கூலிப்படையினரின் எண்ணிக்கை ஆறாயிரத்து 600ல் இருந்து சுமார் 3 ஆயிரத்து 500 ஆக குறைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஆயுதப் படைகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக உக்ரைனுக்கு வெளிநாட்டுக் கூலிப்படைகளின் வருகை மே மாத தொடக்கத்தில் இருந்து நின்று விட்டதாகவும் தங்களிடம் உள்ள தரவுகளின்படி கூலிப்படையினரில் பாதிப் பகுதி அழிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளது.

வான் வழி உயர் துல்லிய ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் மூலம் கூலிப்படையினர் தங்கியிருக்கும் இடங்கள் தகர்க்கப்பட்டதாகவும்,  லுஹான்ஸ்க் பகுதியில் லிசிசான்ஸ்க் நகரம் மட்டுமே உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!