பெசண்ட் நகரில் நடந்த ஒற்றுமைக்கான ஓட்டம்

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஒற்றுமைக்கான ஓட்டம் நடைபெற்றது.

சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ், சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் செந்தில் குமரேசன் ஆகியோர், இந்த நிகழ்வை தொடங்கி வைத்தனர்.
200க்கும் மேற்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ஒற்றுமைக்கான ஓட்டத்தில் பங்கேற்றனர்.

நிகழ்வின் முடிவில் சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் செந்தில் குமரேசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்

75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக நேற்று 75 ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் இலவச தண்ணீர் சேவை திட்டத்தை தொடங்கி வைத்தோம்.

அடுத்து, அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிடம் இருந்து, சுதந்திர போராட்ட தியாகிகளின் பட்டியலை வாங்கி, அவர்களை கௌரவிக்க இருக்கிறோம்.வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறோம் என்றார்.

Translate »
error: Content is protected !!