சிறை கைதிகளுக்கு ஏடிஎம்மா!!

முதல்முறையாக பீகாரில் சிறை கைதிகளுக்கு ஏடிஎம் திறக்கப்பட உள்ளது.

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தண்டனை பெற்று வரும் கைதிகள், சிறைகளில் செய்யும் வேலைகளுக்கு அவர்களுக்கு நேரத்திற்கேற்ப ஊதியம் வழங்கப்படுகிறது.  இதற்கான ஊதியம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. பீகாரில் உள்ள மத்திய சிறையில் மொத்தம் உள்ள 750 கைதிகள் உள்ளனர்.

இவர்களில் 600 பேர் வெவ்வேறு வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில் பூர்னியா மத்திய சிறை அதிகாரிகள் சிறை வளாகத்தில் ஏடிஎம் அமைக்கக்கோரி ஸ்டேட் வங்கி கிளைக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் ஏடிஎம் கார்டு அனைவருக்கும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறைவிதிகளின்படி கைதிகள் ரொக்கமாக ரூ.500 மட்டுமே வைத்திருக்க முடியும். ஏடிஎம் வசதி மூலம் அவர்கள் தேவைப்படும் சோப்புகள், ஹேர் ஆயில் மற்றும் சாப்பிடக்கூடிய பொருட்கள் போன்ற அன்றாடப் பொருட்களை வாங்க தேவையான பணத்தை அதிலிருந்து எடுத்துக்கொள்ள பயன்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!